Tuesday, November 19, 2024

“இளைப்பாருங்கள் கேப்டன்” – பாடகர் ஆண்டனி தாசன் இசை அஞ்சலி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று (வியாழக்கிழமை) காலை காலமானார். அவரது மறைவை அடுத்து பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தி தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாடகர் ஆண்டனி தாசன் உருக்கமாக பாடல் பாடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1988-ல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் படத்தின் ‘இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்’ பாடலை பாடி தனது அஞ்சலியை அவர் செலுத்தியுள்ளார். “எல்லாருடைய உள்ளத்திலும் நீங்க எப்போதும் வாழ்ந்துகிட்டு இருப்பீங்க. நீங்கள் நிம்மதியா இளைப்பாருங்கள் கேப்டன்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

Read more

Local News