Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

உருகி உருகி காதலித்தேன்.. ஆனால்!: டாப்சி ஓப்பன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆடுகளம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக தனது நடிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தினார்.

பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தொடர்ந்து, பேபி என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானார். அடுத்து அவர் நடித்த பிங்க் படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த காதல் கதையை பகிர்ந்திருக்கிறார். “நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது 10ஆம் வகுப்பு படிக்கும் ஒருவரை காதலித்தேன். உருகி உருகி அந்தக் காதலை செய்தேன். அந்த சமயத்தில் நினைத்தபடி பேசுவதற்கு இப்போது மாதிரி செல்ஃபோன் எல்லாம் கிடையாது. தெரு முனையில் இருக்கும் டெலிஃபோன் பூத்துக்கு சென்றுதான் பேச வேண்டும்.

முதலில் அவருக்கும் என் மீது ஆர்வம் இருந்தது. பிறகு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லி எனது காதலை உதறிவிட்டார். என்னையும் படிப்பில் கவனம் செலுத்த சொன்னார். அதனால் அந்தக் காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அந்த காதல் தோல்வியால் நான் ரொம்பவே அழுதுவிட்டேன். அந்த நினைவுகளில் இருந்து நான் மீண்டு வருவதற்கு பல நாட்கள் ஆகிவிட்டன” என்றார்

- Advertisement -

Read more

Local News