Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார்: பிரபலங்கள் இரங்கல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பழம்பெரும் நடிகை லீலாவதி பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85. கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில்பட்டினத்தார்‘, ‘சுமைதாங்கி‘, ‘வளர்பிறை‘, ‘அவள் ஒரு தொடா் கதை‘, ‘நான் அவனில்லை‘, ‘அவர்கள்‘, ‘கர்ஜனைஉட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

பெங்களூரு புறநகா் பகுதியில் உள்ள நெலமங்களாவில் தனது மகன் நடிகர் வினோத்ராஜுடன் வசித்து வந்தாா். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலமானாா். அவர் மறைவுக்கு பிரதமர் மோடி, கர்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

- Advertisement -

Read more

Local News