பன்முகத் திறமை கொண்ட கலைஞானம் 18 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பொருளாதாரத்திலும், உணவுக்கு மிகவும் சிறம பட்டுள்ளார்.
ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கியும் இருக்கிறார். அந்த சமயம் சாப்பாட்டுக்கு கஷ்டமான நேரம். துணை நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சாப்பாடாவது கிடைக்கும் என சரி என்று சொல்லி விட்டேன். சாப்பாடு கிடைக்கும் என்று நடிக்க போனேன் என்று தனது சினிமா அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார் கலைஞானம்.