அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஸ் நாயகனாக நடித்து வெளிவந்துள்ளதுள்ள திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன்.
படத்தில் சதீஸ்,சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம் எப்படி இருக்கு பார்க்கலாம்.
கதைக்களம்கேமிங் துறையில் வேலை தேடி கொண்டிருக்கும் கதாநாயகன் சதீஸ் ஒரு நாள் தெரியாமல் சூனியம் செய்து வைத்திருக்கும் ட்ரீம் கேட்சடில் இருந்து ரெக்கை ஒன்றை எடுத்துவிடுகிறார்.
இதனால் எப்போதெல்லாம் அவர் தூங்குகிறாறோ அப்போதெல்லாம் ஒரு கனவு உலகத்தில் பேயிடம் சிக்கிக்கொள்கிறார். கதாநாயகன் சதீஸ் சிக்கிக்கொண்டது மட்டுமல்லாமல் அவரது தாய், தந்தை, மாமா மற்றும் ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் ட்ரீம் கேட்சர் [Dream catcher]ல் இருந்து ரெக்கையை எடுக்க அவர்களும் கனவு உலகத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.
இதனால் அவர்கள் அனைவரும் சந்தித்த விளைவுகள் என்னென்ன, இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.
கதாநாயகன் சதீஸ் நடிப்பு அருமை அவருடைய நகைச்சுவை ரசிக்க வைக்கிறது அதே நேரம் சீரியஸான இடங்களில் அவருடைய நடிப்பு பாராட்டுக்குரியது.
சரண்யா பொன்வண்ணன் மற்றும் ஆனந்த்ராஜ் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள் சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. விடிவி கணேஷ், நமோ நாராயணன், நாசர் மற்றும் ரெஜினாவின் கதாபாத்திரங்கள் கதைக்குத் தகுந்த நடிப்பை வெளிப்படுத்திருக்கின்றனர். பேயாக நடித்த நடிகை எல்லி அவ்ரம் நடிப்பு அருமை.
அறிமுக இயக்குனரான செல்வின் ராஜ் சேவியர் எடுத்துக்கொண்ட கதைக்களம் வழக்கமான பேய் கதைகளை விட சற்று மாறுபட்டதாகவே இருந்தது. இதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் எனக்கூறலாம்.
ஹாரர் மற்றும் திரில்லர் போன்ற கதைக்களத்தில், அடுத்த என்ன என்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பு குறையாமல் நகர்ந்துள்ளது கதைக்களம். யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை சூப்பர். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் சிறப்பாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் கான்ஜுரிங் கண்ணப்பன் ரசிக்க வைக்கிறது.