Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

விமர்சனம்: கட்டில்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மூன்று தலைமுறையாக தாங்கள் பயன்படுத்தி வரும் கட்டில் ஒன்றை விற்க மனமின்றி தன் வீட்டோடு வைத்துக் கொள்ள நாயகன் போராடும் போராட்டமே இந்தக்கட்டில்திரைப்படம்.

.வி.கணேஷ்பாபு இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்தும் இருக்கிறார்நாயகியாக சிருஷ்டி டாங்கே, மம்மோ இருவரும் நடித்துள்ளனர்.

மேலும், இந்திரா செளந்தர்ராஜன், செம்மலர் அன்னம், கீதா கைலாசம், சம்பத்ராம், காதல் கந்தாஸ், மெட்டி ஒலி சாந்தி, மாஸ்டர் நிதிஷ் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பிரபல எடிட்டரும், இயக்குநருமான லெனின் கதை, திரைக்கதை எழுதி எடிட்டிங்கும் செய்திருக்கிறார். வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

பாட்டன் காலத்தில் இருந்து தாங்கள் வசித்து வரும் பூர்வீக வீட்டை, வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்ட அவ்வீட்டின் இந்நாள் வாரிசுகள் விற்க முடிவு செய்கிறார்கள்.

அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டு, அதேவீட்டில் அம்மா, மற்றும் தன் மனைவி மகனோடு வசித்து வருகிறான் நாயகன்.

அவனுக்கும் அவன் தாய்க்கும் இந்த வீட்டை விற்பதில் உடன்பாடில்லை. இருப்பினும் நாயகனின் அண்ணன், அக்காள் என அனைவரும் வீட்டை விற்று வரும் பணத்தில் தங்கள் பங்கைப் பிரித்துக் கொண்டு தொழில் செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இதனால் நாயகனும் அவன் தாயும் வேறு வழியின்றி வீட்டை விற்க சம்மதிக்கிறார்கள்.

வீட்டை விலை பேச வந்தவர்கள் அவர்களின் பூர்விக கட்டிலைப் பார்த்துவிட்டு, அதற்கும் விலை பேச, நாயகனும் அவன் தாயும் பிடிவாதமாக அதை விற்க மறுத்து விடுகிறார்கள்.

வீடு விற்கப்படும் தேதிக்கு முன்னர் நாயகன் புதிய வீடு ஒன்றை வாங்கி தங்கள் பூர்விக கட்டிலை இடம் பெயர்த்து செல்ல முடிவு செய்கிறான்.

அப்படி அவன் நினைத்தது போல் வீடு பார்த்து கட்டிலை பத்திரமாக மாற்றிக் கொண்டு போனானா..? அதில் எத்தனை சிக்கல்கள் வந்தன..? என்பதை விவரிக்கிறது இதன் திரைக்கதை.

 

இடையில் வரும் செம்மலர் அன்னம் தொடர்பான கதையும், நாயகியாக வரும் சிருஷ்டி டாங்கேவின் முடிவும் மனதை கனக்கச் செய்யும் ஒரு வசீகரத் தன்மை கொண்ட சிறுகதையாக நெஞ்சை கணக்கச் செய்கிறது.

 

தொழிற் சங்கம் தொடர்பான போராட்டங்களும் கவனத்தை ஈர்க்கிறது.

நாயகன்  கணேஷ்பாபு மூன்றுவிதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். மூன்றிலும் முத்திரை பதிக்கிறார். குறிப்பாக,  கட்டிலைப் பாதுகாக்க ஒவ்வொருவரிடமும் கெஞ்சி கூத்தாடும் அப்பா கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.

சிருஷ்டி டாங்கே சிறப்பாக  நடித்து உள்ளார்.   பூர்விக வீட்டைப் பிரியும் சோகத்தை கண்ணில் வைத்தபடி, அந்த வலி வெளியே தெரியாமல் கணவன், மாமியாருடன் வாழும் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் கண்ணீர் சிந்த வைத்திருக்கிறார்.

 

பாட்டியாக நடித்திருக்கும் கீதா கைலாசம் தன் பிள்ளைகள் தங்கள் பூர்விக வீட்டை எவ்வளவு சொல்லியும் விற்கத் துணிந்துவிட்டார்களே என்கின்ற வலியை சுமக்கின்ற தாயாகவும், அந்த வலியை மறைத்து தன் பேரப் பிள்ளையோடு கொஞ்சி மகிழும் பாட்டியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் இது.

 

கணேஷ்பாபுவின் சிறு வயது மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் நிதிஷ் தன் குறுகுறுப்பான நடிப்பால் வசீகரிக்கிறார்.

கட்டிலைத் தேடிச் சென்று அதில் கால் மேல் கால் போட்டு தூங்கும் காட்சியில் குழந்தைக்கு அந்த கட்டில் மீதான பிரியம் அப்பட்டமாக புலனாகிறது. கெளரவ தோற்றத்தில் விதார்த் வந்து செல்கிறார்.

வைட் ஆங்கிள் ரவியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அழகுடன் மிளிர்கிறது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் சிறப்பு.  குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் பின்னணி இசை மனதை பிசைகிறது.

மாமேதை லெனின் அவர்களின் எடிட்டிங் கனகச்சிதம்.

 

மொத்தத்தில் இந்தக் கட்டில் திரைப்படம் ஒரு எளிமையான கதைக் கருவை எடுத்துக் கொண்டு அதை யதார்த்தமான முறையில் சொல்ல முற்பட்டிருக்கிறது.

மனதை உருக்குகிறது. ரசிகர்களின் மனதை கவர்வதோடு, விருதுகள் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

- Advertisement -

Read more

Local News