Tuesday, November 19, 2024

டிச.15 வெளியாகிறது சசிகுமார்- சரத்குமார் நடிக்கும் ’நா நா’!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சரத்குமார் ,சசிகுமார் இணைந்து நடிக்கும் ’’நா நா’’  திரைப்படம் டிச.15 ஆம் தேதி வெளியாகிறதுதிரைப்படம் ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரமாண்டமான வெற்றியை சசிகுமாரும், ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘போர் தோழில்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் அமோக வெற்றியை சரத்குமாரும் பெற்றுள்ளார்.

இருவரும் தற்போது கல்பதரு பிக்சர்ஸ் பி கே. ராம் மோகன் தயாரிப்பில், என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் ‘நா நா’ படத்திற்காக இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 15, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவரும் தங்கள் சிறந்த நடிப்பைக் கொடுத்து, வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இப்படத்தை என்வி நிர்மல் குமார் எழுதி இயக்கியுள்ளார். ஹர்ஷ வர்தன் ரமேஷ்வர் படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன்-த்ரில்லர் என்டர்டெய்னர்களை விரும்புவோருக்கு இது ஒரு முழுமையான விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளார்கள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை பார்வையாளர்களை ஈர்க்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News