Wednesday, November 20, 2024

’மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டம் துறந்தது ஏன்? மனம் திறந்த லாரன்ஸ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் இடம்பெற்ற ‘மக்கள் சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டத்தை சேர்த்து கொண்டார். ஆனால் கொஞ்ச நாட்களில் அதை எடுத்துவிட்டார். இது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராகவா லாரன்ஸ் கூறியதாவது: “மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில்’ மக்கள் சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் இடம்பெறச் செய்தோம்.இதனால் ரஜினி ரசிகர்களே அதற்கு வருத்தப்பட்டார்கள். ‘சூப்பர்ஸ்டார் இருக்கும்போது ’மக்கள் சூப்பர்ஸ்டார்’ என்று போடுவது தவறானது. என்று வருத்தப்பட்டனர். அந்த நேரத்தில் எனக்கு அவ்வளவு பக்குவம் இல்லை. ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டேன். நமக்கு சூப்பர் ஸ்டாரை பிடிக்கும், மக்களுக்கு நல்லது செய்கிறோம். அதனால் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று போடுவதில் என்ன தவறு என நினைத்தேன். அப்பா பேரை சேர்த்துக் கொள்வது போலத்தானே என்று எனக்கு மிகவும் வருத்தம் ஆகிவிட்டது.

இயக்குநர் சாய் ரமணியை அழைத்து, அதை நீங்கள் விருப்பப்பட்டு போட்ட மாதிரி சொல்லிவிடுங்கள். ரொம்ப தப்பு தப்பாகப் பேசுகிறார்கள் என்று கூறினேன். அம்மாவும் உன் தலைவன்  பெயரைத்தானே சேர்த்துக் கொண்டாய்? இதில் என்ன தவறு’ என்று கேட்டார். தவறாக பேசுகிறார்கள் இனி அது இருக்க வேண்டாம்’என்று அம்மாவிடம் சொன்னேன் என்றார் லாரன்ஸ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படம்   விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News