Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

‘கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’முதல் டிரெய்லர் மற்றும் டீசர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆக்‌ஷன் அட்வென்சராக உருவாகியுள்ள ‘Kingdom of the planet of the apes’ படத்தின் முதல் டிரெய்லர் மற்றும் டீசர் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது!

20th செஞ்சுரி ஸ்டுடியோஸின் புதிய ஆக்‌ஷன் அட்வென்சர் படமான ‘கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ஸின் புதிய டிரெய்லர் மற்றும் டீசர் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டுடியோஸ் குளோபல், எபிக் ஃப்ரான்ஸிஸின் புதிய வருகையான இது விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சீசரின் ஆட்சியைத் தொடர்ந்து எதிர்காலத்தில் மனிதர்கள் பல ஏப்ஸ்களை ஆதிக்கம் செய்யத் தொடங்கினர். இதனால், தற்போது அவை மனிதர்கள் நிழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்களது சாம்ராஜியத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு முதிர்ந்த ஏப்ஸ் முன்னெடுக்கிறது. இந்த நிலையில், இவர்கள் கூட்டத்தில் உள்ள ஒரு இளம் ஏப்ஸ் பயங்கரமான ஒரு பயணத்தை மேற்கொள்கிறது. அது தங்களது கடந்த காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் மற்றும் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான எதிர்காலத்தை வரையறுக்கும் தேர்வுகளைச் செய்யவும் இது நினைக்கிறது.

’கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ படத்தை வெஸ் பால் (’மேஸ் ரன்னர்’ டிரையாலஜி) இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் தயாரிப்பாளர்கள் வெஸ் பால், ஜோ ஹார்ட்விக், ஜூனியர் (’தி மேஸ் ரன்னர்’), ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், ஜேசன் ரீட் (’முலான்’), பீட்டர் செர்னின் (’தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ டிரயாலஜி) மற்றும் ஜென்னோ டாப்பிங் (’போர்ட் வி. ஃபெராரி’) நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா திரையரங்குகளில் ‘கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ விரைவில் வெளியிடுகிறது.

- Advertisement -

Read more

Local News