Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘ஹரா’ திரைப்படத்தில் மோகன் ஜோடியாக அனுமோல் ..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீஎன்ட்ரி கொடுக்கும்ஹராதிரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார்.

 யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு லியாண்டர் லீ மார்டி இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில்ஹராபடத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியபோது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்கு பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

ஜீ5 ஓடிடியில்அயலிவெப்ஸ் சீரிஸ் மூலம் ரசிகர்களிடையே அனுமோல் கவனம் பெற்றிருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும்விஜய் 68’ படத்தில் மோகன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News