Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

பார்த்திபன் இயக்கும் புதிய திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் பார்த்திபன் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்கிவருகிறார். முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறதுஎன தான் இயக்கி வரும் புதிய படம் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் வெட்டுள்ள வீடியோவில், நான் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன். வெறும் ரசிகர்களுக்கான திரைப்படமாக இருந்தால் ஏதோ ஒரு படத்தை எடுத்துவிடலாம்; ஆனால், நான் எடுக்கும் திரைப்படம் ரசனை மிகுந்தவர்களுக்கான திரைப்படம்.

இந்தமுறை நான் லீனியர், எக்ஸ்பிரிமெண்டல் என எந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் போகாமல், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது.

நானும் குதூகலமாக இருக்கிறேன், ஏனென்றால் அந்தப் படத்துக்கான டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. என்னுடைய அறிவுக்கு எட்டிய அளவில் படத்தில் உள்ள தவறுகளை திருத்தி உங்கள் பார்வைக்கு எடுத்து வருவேன். படத்தில் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைய உள்ளன. நாம் வழக்கமாக ஹாலிவுட் படங்களை மட்டுமே கொண்டாடுவோம், ஹாலிவுட் படங்களைபோல நம்மால் எடுக்க முடியாது. ஆனால் நமக்கு இருக்கும் ஒரே கட்டுப்பாடு படத்தின் பட்ஜெட்தான்.

  தொழிநுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே அவ்வையார், சந்திரலேகாஆயிரத்தில் ஒருவன் உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. நான் எடுக்கும் படம் பிரமாண்டமான படம் அல்ல. ஆனால் ரொம்ப நுணுக்கமான படம். அதற்கான நிறைய விஎஃபெக்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன. முடிந்ததும் நான் விரைவில் உங்களை நல்ல படத்துடன் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News