பன்முக திறமை கொண்ட திரு.கலைஞானம் சினிமா துறைக்கு வந்த சமயத்தில் அவர் வாட்ச்மேனாக வேலை செய்திருக்கிறார். அப்போது அவருக்கு 1 ரூபாய் சம்பளமாக வழங்கியிருக்கின்றனர். வீட்டில் வறுமையின் காரணமாக எந்த வேலை கிடைத்தாலும் செய்ய தயாராக இருந்துள்ளார்.ஒரு வாரம் வேலை செய்ததில் அவருக்கு 7 ரூபாய் கிடைத்துள்ளது.
அவருக்கு வேலை வாங்கி கொடுத்த இடைத்தரகர் அவர் சம்பளத்தில் இருந்து 3 ரூபாய் கமிஷனாக எடுத்துக்கொண்டார். இதை பிரபல டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் அவர் பகிர்ந்து கொண்டார்.