எம்.ஜி.ஆர் நடித்த ‘தெய்வத்தாய்’ படத்துக்குவசனம்எழுதிதனது திரைப்பயணத்தைதொடங்கினார் கே.பாலசந்தர்.நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் நாகேஷ். ஒரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் புற்று நோயாளியாக சேது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கலகலப்பான நோயாளியாக வலம்வரும் நாயகன். தலைமை மருத்துவரான மேஜர் சுந்தரராஜன் தனது மகள் டாக்டர் இந்திராவை (சௌகார் ஜானகி), மருத்துவ ஆராய்ச்சிக்காக அமெரிக்கா அனுப்ப நினைக்கிறார்.
ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வி.கோபாலகிருஷ்ணன் காதலிக்கிறார். இதனால் அமெரிக்கா செல்வதைத் தவிர்க்கிறார். தனது இறுதி நாள் குறிக்கப்பட்டதை அறிந்த நாகேஷ்.
காதலர்களை சேர்த்து வைக்க நினைக்க ஆனால் அது நீர்க்குமிழி ஆகிறது என்பதுதான் படம்.
இது ஏழாம் நம்பர் வார்டின் கதை என்ற குரலோடு தான் படம் தொடங்குகிறது. சோகமான படத்தைக்கூட ஜாலியாக கொண்டு சென்று இறுதியில் ரசிகர்களை கண்கலங்க வைத்துவிட்டார்.
துறுதுறு நாகேஷின் நடிப்பும் டைமிங் காமெடியும் இந்தப் படத்தின் பலம் சேர்த்தது.
1965-ஆம் ஆண்டு படம் வெளியாகி ஹிட் கொடுத்தது அதற்கு முன்பாகவே பிராசஸிங்கில் படத்தைப் பார்த்த ஏவிஎம் செட்டியார், கே.பாலசந்தரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினார். கே.பி.க்கு கிடைத்த முதல் ரசிகர் கடிதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.