Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

லியோ டிரெய்லர்: தியேட்டர்களுக்கு சிக்கல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிக்கும் லியோ படம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.  இந்த நிலையில் புது சிக்கல் தோன்றி உள்ளது.

லியோ படத்தின் டிரெய்லர் யூடியூபில் வெளியிடப்பட்டதால், சென்சார் செய்யப்படவில்லை. அதே சமயம் திரையரங்குகளிலும் சென்சார் செய்யப்படாத டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் திரையிடப்பட்டது.

ஆனால் சென்சார் செய்யப்படாத டிரெய்லரை திரையரங்குகள் வெளியிடக்கூடாது என்பது  விதி. ஆகவே,  மத்திய தணிக்கை வாரியம், சென்சார் செய்யப்படாத டிரெய்லரை வெளியிட்ட சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தணிக்கை சான்றிதழ் இல்லாமல் டிரெய்லர் திரையிடப்பட்டது கிரிமினல் குற்றம் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News