தமிழில் வெளியான, கண்ட நாள் முதல் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் ரெஜினா. அதனைத் தொடர்ந்து, ஹீரோயினாக பல மொழிகளில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “எனக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச்கள் வந்ததுண்டு” என பேசி அதிரவைத்து இருக்கிறார். மேலும், “பொதுவாக, ‘நடிகைகள் குடிக்கிறார்கள், போதையில் இருக்கிறார்கள், பார்ட்டியில் கூத்தடிக்கிறார்கள்’ என்று கூறுவார்கள். ஆம் அது உண்மைதான்.அதனால் அவர்கள் அனைத்துக்குமே சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நினைப்பது ரொம்பவே தவறு. அவரவர், அவரவரது வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள். இதைவைத்து அவரின் நடத்தையை நீங்கள் எப்படி கேள்விக்குறி ஆக்கலாம். இப்படி நினைப்பது அபத்தத்தம்.
விரும்பினால் அவர் தன் ஆண் நண்பருடன் படுக்கையை பகிர்கிறார். உங்களுடன் அவர் அப்படி இல்லை என்றால், உங்களை அவருக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம். அது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. மற்றவர்களுடன் அவர் அப்படி இருக்கிறார். என்னிடமும் அவர் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுவதற்கு நீங்கள் யார்?” என்று காட்டமாக கேட்டு இருக்கிறார் ரெஜினா.