நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நடிகை ரோஜா, ஆபாச படத்தில் நடித்தார் என்று தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி பேசினார்.
இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ரோஜா, “நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி, சித்ரவதை செய்து வருகிறார்கள். என்னைப் பற்றி மதிப்பிடுவதற்கு நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சியினர் பெண்களை விளையாட்டுப்பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் மீது நான் மானநஷ்ட ஈடு வழக்கு போடப்போகிறேன். அரசியலை இவ்வுளவு கீழ்த்தரமாக பேச பயன்படுத்துகிறார்கள்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.