Wednesday, November 20, 2024

“ஸ்ரீதேவி மரணம்: அனைவருக்கும் எச்சரிக்கை!”: வெளிப்படையாக சொன்ன கணவர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கந்தன் கருணை’ தமிழ்  படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு, தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக கோலோச்சியவர் ஸ்ரீதேவி.

1996இல் போனி கபூரை மணந்த இருக்கு,  ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

2018இல் துபாயில் ஓட்டலில் தங்கி இருந்தபோது, பாத்ரூமில் குளிக்கச் சென்றவர் குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார்.  இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில், ஸ்ரீதேவி மரணம் குறித்து அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். சில தகவல்களை தெரிவித்தார்.

அவர், “ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. விபத்து.   பிரேதப் பரிசோதனை அறிக்கையில்  நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அது குறித்து ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டேன். இன்னுமொரு விசயத்தை இப்போது சொல்கிறேன்.

ஸ்லிமாக இருக்க வேண்டும் – திரையில் நல்ல உடல் அமைப்போடு – நளினத்தோடு தோன்ற வேண்டும் என்பதில் ஸ்ரீதேவி மிகவும் கவனம் செலுத்தினார். இதற்காக, கடுமையாக டயட் இருந்தார். தனது எடையை 46 கிலோ அளவுக்கு குறைத்தார் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அவரை பார்த்தாலே இது தெரியும்.

இதனால் பல சந்தர்ப்பங்களில் மயங்கி இருக்கிறார்.  ஓவர் டயட்டால், அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்தது. ஆகவே, கடுமையான டயட்டை பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தும் அளவுக்கு போனது. அப்படியான ஒரு சந்தர்ப்பமே அவரது உயிரைப் பறித்தது” என்றார்.

அழகு என்கிற என்கிற எண்ணத்தில் ஓவர் டயட் மேற்கொள்ளும் இளம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

- Advertisement -

Read more

Local News