‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது. கடந்த 28-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படம், தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டதாக படக்குழு அறிவித்தது.
இந் நிலையில், ‘சலார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
படத்தின் கிளைமாக்ஸ் உள்ளிட்ட சில காட்சிகளை, ரீ-ஷூட் செய்ய பிரசாந்த் நீல் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தயாரிப்பு தரப்பில் அதற்குச் சம்மதம் தெரிவித்ததால், இப்போது அதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.