ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில்இ தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் தான் இசை அமைக்கிறார்.
ஏற்கெனவே சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கியவர் ஞானவேல். அது சீரியஸான படம்.
ஆகவே ரஜினி ரசிகர்கள், “ரஜினி மாஸ் ஹீரோ. அவருக்கு ஏற்ற அதிரடியான காட்சிகளை இவர் வைப்பாரா” என்று சந்தேகப்பட்டனர்.
இந்த நிலையில், ஜெய்பீம் படத்திலேயே சூர்யாவை வைத்து மாஸான சண்டை காட்சியை படமாக்கியிருக்கிறார் ஞானவேல். ஆனால் அந்த காட்சியை நீக்கிவிட்டார்கள்.
அந்த நீக்கப்பட்ட காட்சியை பார்த்தவர்கள் பிரமித்து போயிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகவே ஞானவேலால் மாஸ் காட்சிகளை இயக்க முடியும் என்பது இதன் மூலம் தெரிந்துவிட்டது.
இந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் திருவனந்த புரத்தில் நடக்க இருப்பதாக தகவல் பரவியது.
இது குறித்து டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நேயர் ஒருவர் கேட்டார். இதற்கு சித்ரா லட்சுமணன் பதில் அளித்துள்ளார். இவர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர் என்பதால் ஆதாரபூர்வமான தகவல்களை தெரிவித்து வருகிறார்.
தலைவர் 170 குறித்து அவர் கூறியது என்ன.. அறிய தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..