Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

சர்ச்சை + கவர்ச்சி நடிகை சோனாவின் வாழ்க்கைத் தொடர்! அவரே இயக்குகிறார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிருகம் படத்தில் அறிமுகமான சோனா, சில காலம் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். ரஜினியின் குசேலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

பச்சமாங்கா என்கிற படம் உள்ளிட்ட சிலவற்றில் இவர் அதீத கவர்ச்சி காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தன்னை காதலிப்பதாக சொல்லி இருவர் ஏமாற்றிவிட்டனர் என்றும் தெரிவித்து இருந்தார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் மகனும் நடிகருமான சரண் மீது பாலியல் புகார் கொடுத்து பிறகு வாபஸ் பெற்றார் சோனா. இப்படி நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில், தனது வாழ்க்கை கதையை திரைப்படமாகவோ அல்லது வெப் தொடராகவோ எடுப்பேன் என்று சோனா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அந்த வெப் தொடருக்கு ‘ஸ்மோக்கிங்’ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொடரை சோனாவே டைரக்டு செய்கிறார். சோனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

சோனா ஏற்கனவே திரையுலகில் சில கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டதாக தெரிவித்து இருந்தார். அந்த விஷயங்களையும் வெப் தொடரில் வெளிப்படுத்த இருப்பதால் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- Advertisement -

Read more

Local News