marநடிகர் மாரிமுத்துவின் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்த இவர், ராஜ்கிரண், மணிரத்னம்,வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம்உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 2008-ல் ‘கண்ணும் கண்ணும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில்பிரசன்னா, உதயதாரா ஜோடியாக நடித்தனர். இதில் வடிவேலுவின் ‘கெணத்த காணோம்’ காமெடி புகழ்பெற்றது.
தொடர்ந்து ‘புலிவால்’, ‘யுத்தம் செய்’ படங்களை இயக்கினார். இவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தினார்.
சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில்கூட, வில்லன் விநாயகனுடன் இணைந்து நடித்திருந்தார்.
தவிர, திருச்செல்வம் இயக்கும் ‘எதிர்நீச்சல்’ என்ற டி.வி. தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதில் அவர் நடிப்புப் பாராட்டப்பட்டது. அவர் மதுரை வழக்கில் பேசும் பேசும் ‘ஏம்மா ஏய்’ என்ற வசனம் எங்கும் பிரபலமானது.
இந்தத் தொடருக்கான டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த போதுதான், மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனது.
இந்நிலையில், ஏற்கெனவே அவர் அளித்த பேட்டி, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் மீண்டும் வெளியிடப்பட்டு உள்ளது.
இதில், தான் திரைத்துறைக்கு வந்தது குறித்து பேசியிருக்கிறார். குறிப்பிட்ட ஒரு இயக்குநரிடம் உதவியாளராக சேர எடுத்த பெரும் முயற்சி… அது கடைசி வரை நிறைவேறாமலேயே போனது குறித்தும் பேசி இருக்கிறார்..
இது குறித்து அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..