அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.384.69 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
’ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாக ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இரண்டாவது நாளான நேற்று இப்படம் ரூ.240 கோடி வசூலித்தது.
இந்த நிலையில் வெளியான மூன்று நாட்களில் இப்படம் ரூ.384.69 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் இதுவரை ரூ.180 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.20 கோடியை தாண்டி இப்படம் வசூலித்துள்ளது. தெலுங்கு பேசும் மாநிலங்களில் ரூ.24 கோடி, கர்நாடகாவில் ரூ.20 கோடி, கேரளாவில் ரூ.7.55 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.