‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற யூடியூப் சேனலின் மூலம், அரசியல் நிகழ்வுகளை கிண்டல் செய்து பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். பிறகு அதிலிருந்து வெளியேறி ‘பரிதாபங்கள்’ என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் துவங்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர்.
இந்நிலையில், க்ரவுட் பண்டிங் முறையில் 6.5 கோடி ரூபாய் நிதி திரட்டி, ‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ என்ற படத்தை துவங்கினர். இந்த படம் தடைபட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக படம் தாமதமாவதாகவும், விரைவில் இந்தப் படத்தை தொடங்குவோம் என தெரிவித்து இருந்தனர்.
தற்போது புதிய படம் ஒன்றை தயாரித்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்குகிறார். விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்து உள்ளனர்.