Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

5 கோடியாக சம்பளத்தை உயர்த்தினாரா வடிவேலு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வடிவேலு தமிழ் திரை உலகின் உச்சபட்ச காமெடி நட்சத்திரமாக உள்ளவர். இந்த நிலையில் அவருடைய திடீர் அரசியல் பிரவேசம் அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அரசியலில் தோற்றால் சகலமும் பின்னடைவு சந்திக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு போல் இவர் நிலை மாறியது. திரைத் துறையின் வாய்ப்புகள் குறை தொடங்கியது.

இதனால் சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்தார். அதே நேரம் கிடைக்கக்கூடிய ஒரு சில படங்களும் வடிவேலுக்கு ஏற்ற கதைகளாக அமையவில்லை. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

இதுவரை சிரிக்க மட்டுமே வைத்துக் கொண்டிருந்த வடிவேலு முதல் முறையாக அழுக வைத்து விட்டார் என்ற பாராட்டைப் பெற்றார்.

இதனால் சில ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் நடித்து வந்த நடிகர் வடிவேலு, தற்போது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தகவலை பத்தரிகையாளர் செல்வம் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News