Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“ தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தேன்!”:  ‘கருவறை’ இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி தயாரித்த ‘கருவறை’ குறும்படத்துக்காக இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இயக்குநர் இ.வி.கணேஷ் “இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் எதிர்பார்த்தேன். உழைப்பின் பலனை எதிர்பார்ப்பது மனித இயல்பு தான். ஏனென்றால் இந்தப் படத்தின் கதையாக இருக்கட்டும், பாடலாக இருக்கட்டும், எடிட்டிங்காக இருக்கட்டும். இசையாக இருக்கட்டும் எல்லாமே அந்த அளவு ஒரு உயிர்ப்புடன் வந்திருந்தது.

இந்தியன் மனோரமா பெஸ்டிவலில் இந்தப் படம் செலக்ட் ஆகவில்லை. ஆனால், அங்குள்ளவர்கள் இந்தப் படம் மிகவும் எல்லாவிதத்திலும் அருமையாக வந்திருந்தது என்பதைச் சொல்லியிருந்தார்கள். அதன்பிறகுதான், நான் தேசிய விருதுக்கு இந்தப் படத்தை அனுப்பி இருந்தேன். மிகவும் எதிர்ப்பார்த்தும் இருந்தேன். அந்தவகையில் தேர்வுக் குழுவிற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

- Advertisement -

Read more

Local News