Wednesday, November 20, 2024

சூப்பர் ஸ்டாரை  நிராகரித்த பாரதிராஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்திய நடிப்பு பள்ளியில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சுதாகர் ஆகியோர் சேர்ந்து படித்தனர். இதில் சிரஞ்சீவியும் சுதாகரும் ஒன்றாக ஒரே அறையில் தங்கியிருந்தார்கள்.

அப்போது “16 வயதினிலே” என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்த பாரதிராஜா, அடுத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்.

அப்போது சிரஞ்சீவியும், சுதாகரும் பாரதிராஜா இயக்க இருந்த புதிய படத்திற்கான ஆடிஷனுக்கு சென்றார்கள்.  சிரஞ்சீவியின் நடிப்பையும் சுதாகரின் நடிப்பையும் பார்த்த பாரதிராஜா, சுதாகரை தேர்ந்தெடுத்தார். சிரஞ்சீவியை நிராகரித்தார்.

அவ்வாறு பாரதிராஜா இயக்கிய திரைப்படம்தான் “கிழக்கே போகும் ரயில்”. இதில் சுதாகர், ராதிகா ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமானார்கள்.

எனினும் சிரஞ்சீவி “பிரனம் கரீடு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உருவாகி தற்போது தெலுங்கு ரசிகர்களின் மெகா ஸ்டாராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சுவையான சினிமா தகவல்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை சொடுக்குங்கள்..

 

 

 

- Advertisement -

Read more

Local News