‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி, நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டை நாசம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் “எனக்கு ஷாருக்கானை பிடிக்கும். அவரைப் போல ஈர்ப்பு வேறு யாருக்கும் இல்லை. அதே சமயம் அவர் பாலிவுட்டில் செய்யும் அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை.
பாலிவுட் போன்ற பெரிய மீடியத்தை நாசம் செய்வதற்கு அவர்கள் தான் பொறுப்பு. படம் குறித்தான ஹைப், பி.ஆர்.ஓ. கையில் படம், படத்தின் ஸ்டார் வேல்யூ இது மட்டும் தான் இப்போது பாலிவுட்டில் செல்லுபடியாகிறது. நட்சத்திர மதிப்பு இல்லாத எதற்கும் மதிப்பில்லை. இதுதான் என் பிரச்சினை” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.