ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.
நீண்ட காலத்துக்குப் பிறகு வில்லனாக நடிக்கிறார் சத்யராஜ். படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய இவர், “நான் செல்லும் இடங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்வியை கேட்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை அந்தந்த கால கட்டத்தில் வசூலில் நம்பர் ஒன் ஆக இருப்பவரை சொல்வார்கள். முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை ஏழி சை மன்னன் என்பார்கள். அடுத்து எம்.ஜி.ஆர் அவர்களை மக்கள் திலகம் என்றார்கள். இப்போது ரஜினியை சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். தியாகராஜ பாகவதரை சூப்பர் ஸ்டார் பாகவதர் என்றும், எம். ஜி. ஆர் அவர்களை சூப்பர் ஸ்டார் எம். ஜி. ஆர் என்று அழைக்கவில்லை.
சிவாஜிக்கு பிறகு நடிப்பில் கமல் தான் என்கிறோம். ஆனால் அவரை நடிகர் திலகம் கமல் என்று அழைப்பதில்லை.
பட்டம் என்பது அந்தந்த காலகாட்டித்தில் மக்களால் தரப்படுவது. கடந்த 45 ஆண்டுகளாக ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார். தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிதான்.
விஜய், அஜித் போன்றவர்களுக்கு தளபதி, தல பட்டங்கள் தான் பொருத்தமானது” என்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பரபரப்பு கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சத்யராஜ்.