டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், பிரபல பாடலாசிசியர் விவேகா, தனது தியுலக அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர், “சூர்யா நடித்த சிங்கம் 1,2, 3 ஆகியவற்றுக்கு நான் பாடல் எழுதினேன். அதில் ஒரு பாடல் காட்சி கடற்கரையோரம் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கிளம்பத் தயாரானார்கள்.
அப்போது சூர்யா, மைக்கில், ‘நாம் வந்தபோது இந்த பகுதி சுத்தமாக இருந்தது. இப்போது குப்பை,கூளமாக கிடக்கிறது. இதை மறுபடி சுத்தப்படுத்திய பிறகே நாம் செல்ல வேண்டும்’ என்றார்.
அதோடு முதல் ஆளாக, தானே குப்பைகளை சேகரிக்கத்துவங்கினார். இதைப் பார்த்தவுடன் மொத்த படப்பிடிப்பு குழுவம் சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியது.
இந்த செயலைப் பார்த்த ஊர் மக்கள் நெகிழ்ந்துபோய்விட்டனர். பேச்சளவில் மட்டுமின்றி செயலிலும் சமூகப்பொறுப்போடு நடந்துகொள்பவர் சூர்யா” என்றார் விவேகா.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளுக்கு கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..