சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க ரஜினி நாயகனாக நடித்து கடந்த பத்தாம் தேதி வெளியான படம் ஜெயிலர். ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி செரப், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினர். அனிருத் இசை அமைத்து இருக்கிறார்.
படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த4 நாட்களில் மட்டும் ரூ.81 கோடி வசூல் அள்ளியுள்ளது. உலக அளவில் ரூ.300கோடி வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படி வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றாலும், கலவையான விமர்சனமே எழுந்துள்ளது.
இது ஏன் என்று டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்:
“ஜெயிலர் படத்தின் முதல் பகுதி, மிக பிரம்மாண்டமாக இருந்தது. ரஜினி ரசிகர்கள் மகிழ்விக்கும் வகையில் சென்டிமெண்ட், அதிரடி என அனைத்து ரசனையான காட்களும் இருந்தன. இதே பாணியில் இடைவேளைக்குப் பிறகும் இயக்குநர் நெல்சன் கொண்டு போயிருந்தால் இன்னும் ரசித்திருக்க முடியும்.
ஆனால் படத்தின் மீதான விமர்சனங்களுக்கும், வசூல் ரீதியாக வெற்றி பெறுவதற்கும் சம்பந்தம் இல்லை.
அதே நேரம், படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்ததே, கலவையான விமர்சனங்களுக்குக் காரணம்.
இதையும் தாண்டி பொன்னியின் செல்வன் 1, விக்ரம் ஆகிய படங்களின் வசூலை முறியடிக்கும் விதத்தில்தான் ஜெயிலர் வசூல் உள்ளது” என்றார்.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க்கை கிளிக்குங்கள்..