நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடியும், உலக அளவில் ரூ.70 கோடியும் வசூலித்தது.
இந்நிலையில் படம் வெளியாகி மூன்றாவது நாளில் உலகளவில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினி ரசிகர்கள், சோசியல் மீடியாவில், எங்கள் தலைவர்தான் சூப்பர் ஸ்டார் என பதிவிட்டு வருகிறார்கள்.