நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர். அனிருத் இசை அமைத்துள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதில் தமிழகத்தில் ரூ.23 கோடி வசூல் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. படம் வெளியான 2 நாட்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.150 கோடியை நெருங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்தது ‘ஜெயிலர்’. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.