Wednesday, November 20, 2024

மாவீரனை முந்தியதா டிடி ரிட்டர்ன்ஸ்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் திரைத்துறையின் பழைய, புதிய சுவாரஸ்ய தகவல்கள் லென்ஸ் பகுதியில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதை தயாரிப்பாளர் – இயக்குநர் – நடிகர் – பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் வழங்கி வருகிறார்.

நேற்றைய நிகழ்ச்சியில் அவர் அளித்த தகவல்கள்:

@ ஆபாவாணன் தயாரிக்க,  அரவிந்த்ராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்து 1986ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஊமைவிழிகள். த்ரில் காட்சிகள் நிரம்பிய இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இப்படம் சென்சார் சர்ட்டிபிகேட்டுக்காக சென்றபோது, ப டத்துக்கு தடை விதித்து விட்டார்கள். ‘சண்டைக் காட்சிகள் மிகக் கொடூரமாக இருக்கின்றன’ என காரணம் கூறப்பட்டது.

பிறகு தயாரிப்பாளர் ஆபாவாணன், பெரும் முயற்சி எடுத்து படத்தை வெளியிட்டார்.

@ இயக்குநர் பா.ரஞ்சித், தங்கலான் படத்துக்குப் பிறகு சர்பாட்டா பரம்பரை பார்ட் டூ எடுக்கிறார். இதில்  ஆர்யா நாயகனாக நடிக்கிறார்.

@ அஜித் நடித்த துணிவு திரைப்படம் சென்னை ரோகினி திரையரங்கில், அதிகாலை காட்சியாக திரையிடப்பட்ட போது, பேனர் வைத்த அஜித் ரசிகர் ஒருவர் தவறி விழுந்து பலியானார்.  அதன் பிறகு தமிழ்நாடு அரசு, அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிப்பதில்லை.

@ சந்தானம் நடித்த  டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றி பெற்றது. ஆனால் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் வசூலை அது தொடவில்லை.

@  விஜய் பீஸ்ட், வாரிசு, திரைப்படத்துக்கு  தமிழ்நாட்டில்  வசூல் இல்லை. ஆனாலும் சாட்டிலைட், டிஜிட்டல், டப்பிங் உரிமைகளால் படம் வணிக ரீதியாக லாபம் கொடுத்தது.

# இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=EVORwJ1Ez2o

 

 

- Advertisement -

Read more

Local News