Wednesday, November 20, 2024

அந்த இசையமைப்பாளரை காதலிக்கிறேன்!: விக்னேஷ் சிவன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் விக்னேஷ் சிவன் – இசையமைப்பாளர் அனிருத்.. இருவருக்கும் இடையே உள்ள நட்பை திரையுலகம் மட்டுமல்ல.. ரசிகர்களும் அறிவார்கள்.  இந்த நிலையில், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு விக்னேஷ் சிவன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“எடிட்டர்  ஸ்ரீகர் பிரசாத், ‘படத்தை தயாரித்தவுடன் சிலருக்கு படம் போட்டு காட்டுவது நல்லது. ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி சில காட்சிகளை மாற்றிக்கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார்.  இது எந்த அளவுக்கு இது சரி வரும் என தெரியலை.

எஸ்ஜே.சூர்யா இயக்கிய  குஷி திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் ரசிக்கவில்லை. ஆனால் அந்தப் படம் பெரிய ஹிட் அடித்தது” என்றார் விக்னேஸ் சிவன்.

தொடர்ந்து பேசிய அவர், “  இசையமைப்பாளர் அனிருத் சப்போர்ட் எனக்கு என்றும் உண்டு. அவரது இசை அருமையானது. முதன் முதலில் அவரது பாடலைக் கேட்கும்போது அழுதுவிடுவேன். அந்த அளவுக்கு நெகிழ்ந்துவிடுவேன்.

அனிருத்தை நான் காதல் செய்கிறேன்” என்று  விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.

இது போன்ற சுவாரஸ்யமான திரைச் செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலை பாருங்கள்..

- Advertisement -

Read more

Local News