Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

என்னது… சாமி படத்தில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யு டியுப் சேனல் ஒன்றில்  ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் செல்வராஜ்:

“2000ம் ஆண்டு முதல் அஜித் கேரியரில் முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், ரெட், வில்லன் போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகின. அஜித்துக்கு மிகப் பெரிய சக்சஸ் கொடுத்த இந்தப் படங்கள் வரிசையில், இயக்குநர் ஹரியின் சாமியும் இடம்பெற வேண்டியது.

சாமி படத்தின் கதையை இயக்குநர் ஹரி முதலில் அஜித்திடம் கூறினார்.  அவரும் ஹரியின் முந்தைய படங்கள் ஹிட் அடித்ததால், சாமி-இல் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

ஆனால் திடீரென அஜித்தால் சாமி படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன்பின்னர் தான் விக்ரமிடம் சென்றார் ஹரி. அப்போது தில், தூள் என கமர்சியல் படங்களில் நடித்துக் கொண்டிருந்த விக்ரம், சாமி பட கதையை கேட்டதும் உடனே ஓகே சொல்லிவிட்டார்.

படமும் வெளியாகி சூப்பர் ஹிட் அடிக்க, விக்ரமின் மார்க்கெட் உச்சம் தொட்டுள்ளது” என்றார் பத்திரிகையாளர் செல்வராஜ்.

 

- Advertisement -

Read more

Local News