பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பத்திரிகையாளரும், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை நேயர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
அந்த வகையில் அவரிடம், “ரஜினி கமல் ஆகியோர், எம்.ஜி.ஆர். – சிவாஜி போன்ற மூத்த நடிகர்களைப் பற்றி மேடைகளில் பேசுகிறார்கள். ஆனால் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த விஜய், அஜித் உள்ளிட்டவர்கள் அப்படியான நினைவுகளை பகிர்ந்துகொள்வது இல்லையே..” என கேட்கப்பட்டது.
அதற்கு சித்ரா லட்சுமணன், “எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜியுடன் ரஜினி, கமல் இருவரும் பழகி இருக்கிறார்கள். ஆகவே அவர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.
ஆனால் அஜித், விஜய் போன்றவர்கள் அப்படி பழகியதில்லை.
தவிர எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்கள் பற்றி இவர்கள் பேசாமல் இருப்பதே நல்லது. பேசி, தேவையில்லாத சர்ச்சை ஏற்படுவதை விட மவுனமே சிறந்தது” என்று பதில் அளித்தார்.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..