இயக்குனர் மிஷ்கின் இப்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்த இவர், தற்போது விஜய்க்கு வில்லனாக லியோ படத்தில் நடித்து வருகிறார்.
மேடையில் கான்ட்ரவசியாக பேசி, செய்திகளில் அடிபடுவது இவரது வழக்கம். இவரது படம் ஒன்றில் நடித்த நடிகை குறித்து மேடையில் ஆபாசமாக பேசினார். பிறகு விசால் குறித்து அதே போல் பேசினார். தவிர, விசால், தன்னை கேவலமாக திட்டியதாக கூறி அந்த வார்த்தையையும் மேடையில் கூறி, கூசவைத்தார்.
அதே போல பல வார்த்தைகளை பயன்படுத்துவது இவரது வழக்கமாக இருக்கிறது.
சமீபத்தில் இவர் ஒரு விழா மேடையில், ஐந்து லிட்டர் தேன் வாங்கியதாக ஆரம்பித்தவர், அதை வைத்து ஆபாசமாக பேசினார். கூட்டத்தில் இருந்தவர்கள் முகம் சுழித்தனர்.
மேலும் பெற்றோரையே கெட்ட வார்த்தைகள் பேசினார்.
‘நல்ல இயக்குநர் என்று பெயர் எடுத்த மிஷ்கின், மேடையில் ஆபாசமாக பேசி பெயரைக் கெடுத்துக்கொள்கிறாரே’ என்று ஆதங்கப்படுகிறார்கள் பலர்.