சிவாஜி நடித்து 1964ம் வருடம் வெளியான திரைப்படம் ஆண்டவன் கட்டளை. அதன்பின் 3 வருடம் கழித்து எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடிக்கும் அரச கட்டளை படம் உருவானது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு வரிகள் எழுதிய கவிஞர் வாலி எம்.ஜி.ஆரை குஷிப்படுத்துவதற்காக ‘ஆண்டவன் கட்டளை முன்னாலே அரச கட்டளை என்னாகும்’ என எழுதியிருந்தார். இது எம்.ஜி.ஆருக்கு கோபத்தையே ஏற்படுத்திவிட்டது. வாலியிடம் கத்திய அவர் ‘என்ன பாட்டு எழுதி இருக்கிறீர்கள். இப்படியெல்லாம் வரிகள் இருந்தா தம்பி சிவாஜியை கிண்டல் செய்கிறோம்’ என மக்கள் நினைப்பார்கள்’ என சொன்னார். அதன்பின் வாலி வேறு வரிகளை எழுதி கொடுத்தார். ஆனாலும், எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை.
முத்துக்கூத்தன் என்கிற கவிஞர் வரவழைக்கப்பட்டார்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை’ என பல்லவி எழுதினார் முத்துக்கூத்தான். வரிகளை படித்து பார்த்த எம்.ஜி.ஆர் ‘இது போதும்.. இது போதும். பிரமாதம்’ என முத்துக்கூத்தனை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம்.