Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

167 பள்ளிகளை தத்தெடுத்த பிரபலநடிகை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்த மோகன் பாபுவின் ஒரே மகள் லட்சுமி மஞ்சு.  குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் நுழைந்த இவர்,  2008 ஆம் ஆண்டு ‘The Ode’ என்ற ஆங்கில திரைப்படம் மூலம்  நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் சில ஆங்கில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி உள்ள அக்னி நட்சத்திரம் படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படி இவர் படங்களில் பிஸியாக பணியாற்றி வந்தாலும் சமூகப் பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் டீச் ஃபார் சேஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  சுமார், 167 பள்ளிகளை தத்து எடுத்து இருக்கிறது.

இதன் நோக்கம் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதுதான். இந்த அமைப்பின் மூலம் புதுமையான கற்பித்தல் முறைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் 16,497 மாணவர்கள் தற்போது பயன் அடைந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News