எம்.ஜி.ஆர். நடித்த அரசகட்டளை படத்தில் ‘புத்தம் புதிய புத்தகமே..’ பாடல் இன்றளவும் பிரபலம். ஆனால் இது இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.யால் நிராகரிக்கப்பட்ட பாடல்.
பாடலை எழுதிய வாலியே இது குறித்து ஒரு முறை கூறியிருக்கிறார்.“பி,ஆர் பந்தலு படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருக்கிறார். அப்போது அந்த படத்திற்கு விஸ்வநாதன் மியூசிக். அதில் ஒரு டூயட் பாடலை நான் எழுதினேன். விஸ்வநாதன் ராமூர்த்தியை விட்டு பிரிந்த வந்து தனியாக இசையமைத்துகொண்டிருந்த காலம் அது. இதில் புத்தம் புது புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான் பொதிகை வழிந்த செந்தமிழிமே உன்னை பாட்டில் வைக்கும் கவிஞன் நான் என்ற பாடலை எழுதினேன்.
இந்த பாட்டை கேட்ட விஸ்வாநாதன் ரொம்ப நீளமா இருக்கு கொஞ்சம் சின்னதாக கொடுங்க என்று சொன்னார். அதன்பிறகு வேறு பாடல் எழுதி கொடுத்தேன்.
அன்றைய தினம் மதியம் அரசக்கட்டளை படத்தின் கம்போசிங் நடந்தது. அந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசை. அப்போது அந்த படத்திற்கு தேவைப்பட்ட டூயட பாடலுக்கு இதை கொடுத்து டியூன் போட சொன்னேன். அவர் அருமையாக டியூன் போட்டு கொடுத்தார்.
இந்த பாடல் பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த பாடல் எனக்கு பிடித்த முக்கிய பாடல்களில் ஒன்றாகவும் மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.