தனது சக நகைச்சுவை நடிகரான விவேக்கை, திரையுலகைவிட்டே ஒழிக்க வடிவேலு திட்டமிட்டார் என நகைச்சுவை நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “விவேக் தன்னுடன் நடிக்க சின்ன நடிகர்கள் பலருக்கு வாய்ப்பு அளித்தார். இதனால் அவரது காமெடி வெரைட்டியாக இருக்கும். இதை ஒழிக்க வடிவேலு திட்டமிட்டார். விவேக்குடன் யாரும் நடிக்கக் கூடாது என நினைத்தார்.
‘பசுபதி C/O ராசாக்காபாளையம் படத்தில் விவேக்குடன் சில காட்சிகளில் நடித்து கொண்டிருந்தேன். படப்பிடிப்பு இடைவேளையில் ஒருவர் வந்து ‘வடிவேல் சார் உங்களை கூப்பிட்டார். இந்த படத்தை அப்படியே விட்டுவிட்டு வர சொன்னார்’ என அழைத்தார். ஆனால், அதை நான் ஏற்கவில்லை. இந்த படத்தை முடித்துவிட்டு அவர் படத்திற்கு வருகிறேன் என சொன்னேன். அதன்பின் வடிவேல் என்னை அழைக்கவில்லை. விவேக்கின் வளர்ச்சி மீது இருந்த பொறாமையில்தான் வடிவேல் அப்படி நடந்து கொண்டார்’ என ராஜேந்திரன் கூறியிருந்தார்.