மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய சுவாரஸ்யமாக நினைவு ஒன்று.
பிரபல பழம்பெரும் இயக்குனரான ஏ சி திரிலோகசந்தரின் ஒரு படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருக்கும் போது ஏவிஎம் சரவணன் அந்த படப்பிடிப்பிற்குள் வந்தாராம். அப்போது சிவாஜி உடல்நிலை சரியில்லாததை போல ஏவிஎம் சரவணன் உணர்ந்திருக்கிறார். நேராக சிவாஜி இடமே சென்று ஏதேனும் உடம்பு சரியில்லையா என கேட்டாராம்.
அதற்கு சிவாஜி என் உடல் அனலாக கொதிக்கிறது. காய்ச்சலில் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் என கூற அதற்கு சரவணன் ஓய்வு எடுக்க வேண்டியதுதானே எனக் கூறி இருக்கிறார். அதற்கு சிவாஜி என் காய்ச்சலுக்கு காரணமே நாளை ஒரு நாடகத்தில் நான் ஏற்று நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தை எண்ணி தான் எனக் கூறினாராம். அது ஒரு ஐயர் வேடம் என்றும் அதை நினைத்து தான் எனக்கு காய்ச்சலை வந்து விட்டது என்றும் கூறினாராம்.
அதற்கு சரவணன் ஐயர் வேடம் தானே? பாஷையை மாற்றி பேசினால் போதும். அதை நினைத்து ஏன் இந்த அளவுக்கு அவதிப்படுகிறீர்கள் என கேட்டாராம். அதற்கு சிவாஜி “பாஷையை மட்டும் மாற்றிப் பேசினால் போதுமா? உடல் அசைவுகளையும் அதற்கேற்றார் போல மாற்ற வேண்டும் அல்லவா? அது மட்டுமில்லாமல் அது சாதாரண அய்யர் வேடம் இல்லை. பிரஸ்டீஜ் பத்மநாபன் என்ற ஒரு மிகப்பெரிய கதாபாத்திரம் அது. அதனால் தான் அதை நினைத்து எனக்கு காய்ச்சலே வந்து விட்டது” எனக் கூறியிருக்கிறார்.அந்த நாடகம் வியட்நாம் வீடு என்ற நாடகமாம்.
இந்த தகவலை பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் கூறி உள்ளார்.