விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகமானவர் நிஹாரிகா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார், சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள்.
இவர், சைதன்யா என்பவரை காதலித்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிஹாரிகா, தற்போது சட்ட ரீதியாகவே விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டார்.
இதுகுறித்து நிஹாரிகா தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. ஆனால், சில நாட்களுக்கு முன், இருவருமே சட்ட ரீதியாக பிரிந்துவிட்டதாக அறிவித்தார்.
இதன் பிறகு நிஹாரிகா தனது இன்ஸ்டாவில் உள்ள திருமண போட்டோக்களை நீக்கி விட்டார்.
இந்த நிலையில் தொடர்ந்து நெட்டிசன்கள் பலர், “ஏன் பிரிந்தீர்கள்.. என்ன பிரச்சினை” என நிஹாரியாவை கேட்டு வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத அவர், “தயவு செய்து உங்கள் வேலையைப் பாருங்கள்” என காட்டமாக தெரிவித்து உள்ளார்.