Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

‘கேஜிஎஃப்’ மூன்றாம் பாகமா ‘சலார்’?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், செப். 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.

இப்படம் ’கேஜிஎஃப்’ யுனிவர்ஸின் ஓர் அங்கமாக இருக்கலாம் என்று ஆரம்பம் முதலே சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன. ‘கேஜிஎஃப்’ படத்தைப் போலவே அதே இருண்ட பின்னணி, புழுதி பறக்கும் ஆக்‌ஷன், துணை கதாபாத்திரங்களின் பில்டப் வசனங்களுடன் இன்று அதன் டீசர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி ‘கேஜிஎஃப்’ படத்தில் வரும் அதே நிலப்பரப்புகள் ‘சலார்’ டீசரிலும் இடம்பெற்றுள்ளதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து ஸ்க்ரீன்ஷாட்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் ‘சலார்’ படம்தான் ‘கேஜிஎஃப்’ படத்தின் மூன்றாம் பாகமாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர். இதனால் #Salaar, #Prabhas ஆகிய ஹேஷ்டேகுகளுடன் #KGF3 என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News