டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட், மெட்ராஸ் புகழ் ஹரி, ஸ்வாதி முத்து , ஶ்ரீலேகா ராஜேந்திரன்டா, சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “காடப்புறா கலைக்குழு”.
காடப்புறா கலைக்குழு என்ற பெயரில் கரகாட்ட குழு ஒன்றை நடத்தி வருகிறார் முனீஸ்காந்த். இக்குழுவில், மேளம் வாசிப்பவராக வருகிறார் காளி வெங்கட்.
வெள்ளந்தி குணம் கொண்ட முனீஸ்காந்த் தன் கலை மீதும் மற்றவர்கள் மீதும் அளவு கடந்த அன்பு செலுத்தி வருகிறார்.
முனீஸ்காந்தும் காளிவெங்கட்டும் பல வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். அனாதையாக நின்ற ஹரியை தத்தெடுத்து 20 வருடங்களாக உடன்பிறந்த தம்பியாக வளர்த்து வருகிறார் முனீஸ்காந்த்.
அவர்,அதே ஊரில், இசைக் கச்சேரி குழு வைத்திருக்கும் சூப்பர் குட் சுப்ரமணியின் சகோதரியான நாயகி ஸ்வாதி முத்துவை காதலிக்கிறார்.
இதற்கிடையே பஞ்சாயத்து தலைவரான மைம் கோபி முனீஸ்காந்த் மீது அவ்வப்போது சின்ன சின்ன கோபத்தை காட்டி வருகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
கதையின் நாயகனாக முனீஸ்காந்த், வழக்கம் போல தனது பாணியில் நடித்து இருக்கிறார். சில காட்சிகளில் நெகிழ வைத்து விடுகிறார். குறிப்பாக, ஶ்ரீலேகா ராஜேந்திரன் மரணப்படுக்கையில் இருக்கும் போது முனீஷ்காந்த் நடிப்பு உருக வைக்கிறது. ஆனால் கரகாட்டம் என்ற பெயரில் அவர் ஆடுவதை சகிக்க முடியவில்லை.
காளிவெங்கட்டும் வழக்கமான தனது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். ஹரி, ஸ்வாதி முத்து நடிப்பு ஓகே ரகம்.
சூப்பர்குட் சுப்ரமணியின் கதாபாத்திரம், கெட்-அப், நடிப்பு.. அய்யோ!
பாரம்பரிய இசையைப் போற்ற வேண்டும் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். தவிர ஆபாசம், வன்முறை இல்லாத படம்.
இதெல்லாம் ஓகேதான். காட்சி, திரைக்கதை அமைக்கும்போது கவனம் வேண்டாமா…