Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

லியோ கிளைமாக்ஸ் ட்விஸ்டை உடைத்த மிஷ்கின்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லியோ படத்தின் கிளைமாக்ஸ் குறித்து மிஷ்கின் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதில், “ கிளைமாக்ஸ் காட்சியில் நானும் விஜயும் சண்டையிடுவது போல் ஒரு காட்சி இருக்கிறது. அப்போது அவர் என்னை அடிப்பதற்கு தயங்கினார். நான் அடிங்க என்று சொன்னேன். உடனே விஜய், நான் அண்ணனை அடிக்க மாட்டேன் என்று என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து லோகேஷ் எப்படியோ வேறு ஏதாவது செய்யலாம் என்று யோசித்தார். ஆனால், நான் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. நீங்கள் என்னை அடியுங்கள் என்று சொன்னேன். எப்படியோ அவரை சம்மதித்து அந்த காட்சியில் நடிக்க வைத்தோம்” என்று கூறியிருந்தார்.

இதன் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் மிஸ்கின் நடிக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அதோடு மிக ரகசியமாக நடந்து வரும் லியோ படம் குறித்து மிஸ்கின் போட்டு உடைத்துவிட்டார் என சோசியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

- Advertisement -

Read more

Local News