Wednesday, September 18, 2024

ரோபோ சங்கர் ஆபாச பேச்சு!: வலுக்கும் கண்டனங்கள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ள பார்ட்னர்  படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில்  பேசிய ரோபோ சங்கர், “ஹன்சிகா அவ்ளோ அழகு! அப்படியே பார்க்க மெழுகு சிலை போல…  உருட்டி வைத்த மைதா பொம்மை போல இருக்கிறார்.

படத்தில் ஒரு சீனில் நடிகை ஹன்சிகாவின் முட்டிக்கு கீழே கால் பகுதியை நான் தடவுவது போல ஒரு காட்சி இருந்தது. ஆனால், ஹன்சிகா சம்மதிக்கவே இல்லை.   அவர் கால் விரலையாவது தடவிக் கொள்கிறேன் என்று கேட்டும் சம்மதிக்கவில்லை.  ‘ஹீரோ ஆதி மட்டும்தான் தடவ வேண்டும். காமெடி நடிகர் நோ டச்சிங் டச்சிங்’ என்று சொல்லிவிட்டார்”   என்று ரோபோ சங்கர் பேசினார்.

இது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாபு,  ‘ஒரு சினிமா விழா மேடையில் மீடியாக்கள் முன்னிலையில் ஆபாசமாக பேசுகிறார் ரோபோ சங்கர். ஹன்சிகா சிரித்து கொண்டே அவர் பேச்சை ரசிக்கிறார்! ஹன்சிகாவிற்கு நன்றாகவே தமிழ் புரியும் ஓரளவு பேசுவார்!

ரோபோ சங்கரின் இந்த பேச்சுக்கு ஒரு பத்திரிகையாளர் எதிர்ப்பை தெரிவித்திருந்தார் மகிழ்ச்சி!

அதே சமயம் ரோபோ சங்கர் இது போன்ற சில சினிமா விழாக்களில் மீடியா முன் மீடியாக்காரர்களையே கேலி செய்து மிகவும் மோசமாக கிண்டல் அடித்துள்ளார். அப்போதே அதற்கு கடுமையான எதிர்ப்பு குரல் கொடுத்திருந்தால்…இன்று மீடியா முன் ஹன்சிகா காலை தடவுவதற்கு முயற்சி செய்ததை ஆபாசமாக பேசும் தைரியம் வந்திருக்காது’ என்று தனது முகநூல் பதிவில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அதே போல பலரும், ‘இத்தனை வருட அனுபம்.. வயது  ஆகியும் ரோபோ சங்கர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவே இல்லையே’ என ஆதங்கத்துடன் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News