Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

இதிலும் கமல்தான் முன்னோடி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைத்துறையின் அத்தனை பிரிவுகளிலும் திறமை உள்ளவர் நடிகர் கமல். வெளிநாடுகளில் அறிமுகமாகும் நவீன தொழில் நுட்பங்களை இங்கு கொண்டு வருவதில் அவர்தான் முன்னோடி.

அதே போல வித்தியாசமான படங்கள் அளிப்பதிலும் அவர்தான் முதலில் நிற்பார். உதாரணமாக அவர் நடித்து 1987ல் வெளியான விக்ரம் படத்தைச் சொல்லலாம். அப்போது கம்ப்யூட்டர் என்றாலே பலருக்கும் தெரியாது. அந்த நிலையில் கம்ப்யூட்டரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.

அதே போல எம்.ஜி.ஆருக்கப் பிறகு பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்குவது குறித்து சிந்தித்தவரும் அவர்தான்.

இது குறித்து 1989 ஆம் வெளிப்படையாக பத்திரிக்கை ஒன்றிலும் கூறியிருந்தார். மேலும், மணிரத்தினம், பிசி ஸ்ரீ ராமிடம் கமல் விவாதித்தார். அப்போது, நாவலில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் வரும். அதை தவறவிடக்கூடாது. அதே நேரம் திருவிழா கூட்டமாகவும் படம் இருக்கக் கூடாது என்றெல்லாம் மூவரும் விவாதித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடிக்க சத்யராஜ், பிரபு போன்றவர்களிடமும் பேசி சம்மதம் வாங்கி இருந்தார்கள்.

இந்த படத்திற்கு இசை அமைப்பாளர்கள் இளையராஜா என்று பேசப்பட்டிருந்தார். இந்த படத்தில் வந்திய தேவனாக கமல் நடிப்பது குறித்து உறுதியாகி இருந்தது. மணிரத்னமே பொன்னியின் செல்வன் படத்தை இயக்க வேண்டும் என்று கமல் தீர்மானம் செய்திருந்தார். படத்தின் திரைக்கதை எழுதும் வேலையும் மும்முரமாக நடந்தது.

ஆனால், திட்டமிட்டபடி படம் எடுக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் பட்ஜெட் தான். அப்போதே இந்த படத்தை எடுக்க இரண்டு கோடிகள் தேவைப்பட்டது. இந்த படத்தை கமலே தயாரிக்க முடியும் செய்திருந்தார்.  ஆனால், படத்தில் ஏதாவது குளறுபடி நடந்தால் இரண்டு கோடி என்ற பட்ஜெட் 4 கோடி ஆகிவிடும் என்ற பல சிக்கல்கள் இருந்ததால் பொன்னியின் செல்வன் படம் எடுக்காமலேயே போனது.

- Advertisement -

Read more

Local News