Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

த்ரிஷா நடிக்கவிருக்கும் புதிய படம்!  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2002ம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். அஜித், விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள த்ரிஷாவுக்கு இடையில் சில படங்கள் தோல்வியாகவே அமைந்தது.

இந்நிலையில் அவரது கேரியரை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் என்றால் அது விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ’96’ தான். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘பரமபதம் விளையாட்டு’, ‘பொன்னியின் செல்வன்’ என சமீபத்திய படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பைப் கொடுத்து வருகின்றன.

இவர் தற்போது தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’, ‘ராம் பாகம் 1’, ‘தி ரோடு’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவியுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை, கல்யாண் கிருஷ்ணா இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News