பொதுவாக, வில்லி நடிகைகளை மக்கள் திட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் சீரியல் வில்லி நடிகையான ஸ்ரீதேவி அசோக் செய்த தரமான சம்பவத்தை நெட்டிசன்கள் பாராட்டித்தள்ளுகிறார்கள்.
. சன்டிவியின் செல்லமடி நீ எனக்கு என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கியவர் ஸ்ரீதேவி அசோக். தொடர்ந்து பல சீரியல்களில் வில்லியாக நடித்து வந்த இவர், விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலிலும் இவர் வில்லியாகவே நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியின் பொன்னி சீரியலில் நடித்து வருகிறார்.
ஸ்ரீதேவி அவ்வப்போது தனது குடும்பத்துடன் வெளியில் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அமீத்தில் அப்படி பைக் ரைடு சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பயணத்தில் ஸ்ரீதேவி தனது 3 வயது மகளுக்கும் ஹெல்மட் அணிவித்து அழைத்து செல்கிறார். இந்த புகைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், ஸ்ரீதேவி மிகவும் பொறுப்பானர் சமூக அக்கறை கொண்டவர் தனது 3 வயது மகளுக்கு கூட ஹெல்மட் அணிவித்து பாதுகாப்பாக அழைத்து செல்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.